55/542:திருக்குறள் - செங்கோன்மை
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல் நோக்கி வாழும் குடி. உலக உயிர்களெல்லாம் மழையை நோக்கி வாழ்கின்றன அதுபோல மக்கள் மன்னனது செங்கோல் கண்டு வாழ்வார்.உலகத்தில் வாழும் உயிரினங்கள் வான்மழையை நம்பியே உயர்வாழுகின்றன அந்த மழையில்லாமல் உயிர்கள் வாழ்வது கடினம் அதேபோன்று மக்கள் அரசாங்கத்தின் சிறந்த அரசாட்சியை பொறுத்தே மகிழ்ச்சியாக வாழ்வதா இல்லையா என்பது அமையும் என எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .
Comments