58/572:திருக்குறள்-கண்ணோட்டம்
திருக்குறள்:
கண்ணோட்டத்து உள்ளது உலகம்; அஃது இல்லார்
உண்மை நிலக்குப் பொறை. (குறள் 572 - அதிகாரம்: கண்ணோட்டம்)
பொருள்:
உலகியல் முறைகளின் இயங்குதல் என்பது பிறர் துயரம் கண்டு இரங்கும் கண்ணோட்டத்தின் (அன்பும் கருணையும்) அடிப்படையில்தான் அமைந்திருக்கிறது; அந்த இரக்கக் குணம் இல்லாதவர்கள் உயிரோடு வாழ்வது இந்த பூமிக்குச் சுமையே ஆகும்.
விரிவாக்கம்:
மனித சமுதாயம் ஒற்றுமையாகவும் அமைதியாகவும் இயங்குவதற்கு அடிப்படையாக இருப்பது இரக்கமும் பரஸ்பர புரிதலும்தான். பிறருடைய நிலையைப் புரிந்து கொண்டு, அவர் மீது கருணை காட்டி வாழும் பண்பே உலகியலின் அச்சாணியாகும். இந்த மனிதநேயமும் இரக்கமும் சிறிதும் இல்லாமல், சுயநலத்தோடும் கல்நெஞ்சோடும் வாழும் மனிதர்கள் சமூகத்திற்கு எந்த வகையிலும் உதவுவதில்லை. அப்படிப்பட்டவர்கள் இந்த பூமியில் பாரமாகத்தான் வாழ்கிறார்களே தவிர, பயனுள்ள வாழ்க்கை வாழவில்லை என்று வள்ளுவர் இக்குறளில் மிகக் கடுமையாக எச்சரிக்கிறார்.
English Translation:
Thirukkural:
Kannottaththu Ullathu Ulagam; Ahthu Illaar
Unmai Nilakkup Porai.
Meaning:
The functioning of the world rests upon gracious compassion; those who are devoid of it are merely a burden upon the earth.
Explanation:
Valluvar underscores that human society survives and thrives only because of empathy, mercy, and kindness (Kannottam). Individuals who lack this essential human quality and live entirely devoid of compassion contribute nothing to the world; their very existence is nothing more than an extra weight upon the earth.
— தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும். பாலாஜி பாலசுப்பிரமணியம்.
[God to man is Gita; Man to God is Thiruvasagam; Man to man is Thirukkural].
"உன் தாய்மொழி மதிக்கப்படவில்லை என்றால் உன் குரல்வளை நெரிக்கப்படுகின்றது என்று பொருள்."

Comments