67/662:திருக்குறள் -வினைத்திட்பம்
ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.வருமுன் காத்தல் தீயவை வந்தபின் தளராமை இவ்விரண்டும் அறிஞர்கள் கண்ட வழி.மனிதர்களின் வாழ்க்கையில் தீவினைகள் வந்து சேரக்கூடும் தீய சக்திகளை வரமுன் அவற்றை எதிர்கொண்டு மனம் தளராது வாழ்வை சிறப்பித்து வாழ்ந்துகொண்டு போவதே அறிஞர்கள் வாழ்வினில் கண்ட வழி என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் . பாலாஜீ பாலசுப்பிரமணியம் .

Comments