67/665:திருக்குறள்-வினைத்திட்பம்
திருக்குறள்:
வீறு எய்தி மாண்டார் வினைத்திட்பம், வேந்தன்கண்
ஊறு எய்தி உள்ளப் படும். (குறள் 665 - அதிகாரம்: வினைத்திட்பம்)
பொருள்:
வெற்றியால் சிறப்புப் பெற்றுச் சான்றாண்மை அடைந்தவர்களின் 'செயல் திட்பமானது' (மனவுறுதியும் திறனும்), அரசனிடம் சென்று சேர்ந்து அவனால் போற்றப்பட்டு மதிக்கப்படும்.
விரிவாக்கம்:
ஒரு நாட்டின் குடிமக்களோ அல்லது அமைச்சர்களோ எத்தகைய இக்கட்டான சூழலிலும் தங்களின் மனவுறுதியாலும் செயலாக்கத் திறத்தாலும் ஒரு பெரிய காரியத்தை வெற்றிகரமாக முடித்துக்காட்டுகின்றனர். அப்படித் தன் செயலால் பெருமை பெற்றவர்களின் அந்த அரும்பெரும் திறமை, நாட்டின் மன்னனின் கவனத்திற்குத் தாமே சென்று சேரும். மன்னனும் அந்தத் திறமையாளர்களின் உறுதியைக் கண்டு வியந்து, அவர்களை உயர்வாக மதித்துப் பாராட்டிச் சிறப்பிப்பான். திறமையானவர்களின் உழைப்பும் மனவுறுதியும் எங்குமே மறைந்துபோகாது; அது உரிய உயர்விடத்தை எட்டியே தீரும் என்ற உயர்ந்த அரசியல் மற்றும் மேலாண்மைக் உண்மையை வள்ளுவர் இக்குறளில் எடுத்துரைக்கிறார்.
English Translation:
Thirukkural:
Veeru Eythi Maandaar Vinaiththidpam, Veenthankan
Ooru Eythi Ullap Padum.
Meaning:
The firmness of action of those who have attained greatness and victory will reach the king and be highly esteemed by him.
Explanation:
Valluvar explains that the resolute determination and successful execution of tasks by capable individuals will not go unnoticed. Their exceptional capability will naturally reach the ruler's attention, earning his deep appreciation, respect, and recognition.
— தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும். பாலாஜி பாலசுப்பிரமணியம்.
[God to man is Gita; Man to God is Thiruvasagam; Man to man is Thirukkural].
"உன் தாய்மொழி மதிக்கப்படவில்லை என்றால் உன் குரல்வளை நெரிக்கப்படுகின்றது என்று பொருள்."

Comments