67/669:திருக்குறள்-வினைத்திட்பம்

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை.துன்பம் மேலும் மேலும் வந்தாலும் இன்பம் தரும் செயலை துணிந்து செய்தல் வேண்டும்.துன்பங்கள் எவ்வளவு வந்தாலும் இன்பங்களை தரக்கூடிய செயல்களை மனத்துணிவுடன் நிறைவேற்ற வேண்டும் துன்பங்களை கண்டு  பயந்து தவிர்த்து விடக்கூடாதென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

Comments