81/809:திருக்குறள்-பழமை
திருக்குறள்:
கெடாஅ வழிவந்த பேண்மையார் கேண்மை,
விடாஅர் விழையும் உலகு. (குறள் 809 - அதிகாரம்: நட்புாராய்தல்)
பொருள்:
காலத்தால் கெடாமல் தலைமுறை தலைமுறையாகத் தொடரும் அன்புச் சிறப்பைக் கொண்டவர்களின் நட்பினை, உலகத்தார் எக்காலத்திலும் விடாமல் விரும்பிப் போற்றுவர்.
விரிவாக்கம்:
காலம் மாறினாலும், சூழ்நிலைகள் எத்தனையோ மாறினாலும், பழமை குன்றாமல் தொடர்ந்து வரும் அன்பும் நட்பும் உயர்ந்தது. எவ்விதக் குறையும் இல்லாமல் என்றும் நிலைபெற்று விளங்கும் அத்தகைய நல்லோர்களின் நட்பை இந்த உலகமும் சான்றோர்களும் எப்போது விலக்காமல் போற்றி மதிப்பார்கள் என்று வள்ளுவர் எடுத்துரைக்கிறார்.
English Translation:
Thirukkural:
Kedaaa Vazhivantha Penmaiyaar Kenmai,
Vidaaar Vizhaiyum Ulagu.
Meaning:
The world will unfailingly desire and cherish the friendship of those who maintain an unbroken, enduring affection handed down through time.
Explanation:
Valluvar highlights that the world deeply respects and clings to the enduring, unwavering friendship of noble souls whose affection remains strong, pure, and unbroken across the passage of time.
— Daily a Kural, Meaning, and Explanation. Balaji Balasubramaniam.
[God to man is Gita; Man to God is Thiruvasagam; Man to man is Thirukkural].
உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

Comments