81/810:திருக்குறள்-பழமை
திருக்குறள்:
விழையார் விழையப் படுப, பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தவர். (குறள் 810 - அதிகாரம்: நட்புாராய்தல்)
பொருள்:
பழைய நண்பர்களிடம் தங்களது நல்ல பண்பிலிருந்து சிறிதும் மாறாமல் பிழையின்றி நடப்பவர்கள், தம்மை விரும்பாத பகைவராலும் விரும்பப்பட்டுப் போற்றப்படுவர்.
விரிவாக்கம்:
காலம் காலமாகத் தொடரும் பழைய நட்பில் எத்தகைய சூழ்நிலையிலும் தன் நல்ல குணத்தையும் மாறDாத அன்பையும் கைவிடாமல் உறுதியாக இருப்பதே உண்மையான பண்பாடாகும். எளியோரிடம் மட்டுமல்லாமல், நம்மை எதிர்க்கும் பகைவர்களும்கூட அத்தகைய உன்னத மனிதர்களின் நற்பண்பைக் கண்டு வியந்து அவர்களை விரும்புவார்கள். எக்காலத்திலும் மாறாத நிலைத்த நட்பும் நற்பண்பும் ஒருவனுக்குப் பகைவர்களிடமிருந்தும் நன்மதிப்பைப் பெற்றுத் தரும் என்று வள்ளுவர் எடுத்துரைக்கிறார்.
English Translation:
Thirukkural:
Vizhaiyaar Vizhaiyap Paduba, Pazhaiyaarkan
Panbin Thalaippiriyaa Thavar.
Meaning:
Even those who do not love them will love and praise such persons as never swerve from true courtesy towards old friends.
Explanation:
Valluvar states that individuals who steadfastly maintain their noble character and unfailing affection toward long-standing friends, without deviation, will ultimately win the admiration and respect even of their enemies.
— Daily a Kural, Meaning, and Explanation. Balaji Balasubramaniam.
[God to man is Gita; Man to God is Thiruvasagam; Man to man is Thirukkural].
உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

Comments