82/812:திருக்குறள்-தீ நட்பு


82/812:உறின்நட்டு அறின்ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை பெறினும் இழப்பினும் என்.தமக்கு பயன் ஏற்படுமாயின் நட்பு செய்வது இல்லையாயின் விலகிப் போவாருடைய நட்பை பெற்றாலும் இழந்தாலும் என்ன? தங்களுக்கு ஏதாவது பயன் வருமானால் அதையிட்டு நட்புக்கொள்வதும் எதுவும் கிடைக்காது இந்த நட்பில் பயன் எதுவுமில்லையென அறிந்து கொண்டு விலகி செல்லும் நட்பு நட்பாக இருந்தால் என்ன அப்படிப்பட்ட நட்புறவு இல்லாமல் போனாலென்ன ? எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிறமணியம்.அழிவது நாமா
க இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

Comments