93/921:திருக்குறள்-கள்ளுண்ணாமை


உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகுவார். என்றும் கள்ளின் மீது மிகுந்த விருப்பமுடன் இருப்பவர்கள் பிறர் முன் மதிப்பை இழப்பார் இழிவான செயலுக்கு வெட்கப்படவுமாட்டார்.தினம் தினம் மதுபானம் அருந்தும் பழக்கமுடைய மக்கள் சமுதாயத்தின் முன் மதிப்பிழந்து வாழநேரிடும் வாழ்வில் மரியாதையற்ற செயல்களை செய்ய தயங்கமாட்டார்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிறமணியம் . அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

Comments