94/931:திருக்குறள்-சூது


வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றாதூஉம் தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று.வெல்லும் திறமையிருப்பினும் சூதினை விரும்பற்க அவ்வெற்றி தூண்டிற்கொக்கியினை மீன் விழுங்கியது போலாகும்.சூதாட்டத்தில் திறனும் தேர்சியும் பெற்று வெல்லக்கூடிய ஆற்றல் இருந்தாலும் அதை நாடாதிருப்பதே வாழ்வியலுக்கு சிறப்பாகும் மன போன போக்கில் சூதாட்டத்தை நாடிவிட்டால் தூண்டிலில் சிக்கி மீன் போல அவதிப்படவேண்டிவருமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்