100/991:திருக்குறள்-பண்புடைமை
எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும் பண்புடைமை என்னும் வழக்கு.எவரிடத்தும் எளிதாக நட்புகொண்டு இனிதாக கலந்துரையாடுதல் பண்புடைமை என்ற நடத்தையைத்தரும்.மனிதர்களின் வாழ்வுதனில் எவரிடம் நட்பு கொண்டாலும் பண்பாண வார்தைகளை உபயோகித்து நட்புறவுடன் இனிதாக கலந்துரையாடல்கள் பண்புடைமை என்ற நல்ல வாழ்கை நடைமுறையை வாழ்வுதனில் தருமென்று எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம்.உலகத்தினுள் வாழ்வாங்கு வாழ சிறந்த சிந்தனைகளையளிக்கும் திருக்குறள் சிந்தனை துளிகள்.

Comments