கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவார் நுண்ணியர்எங் காதலவர் . என் காதலர் மிகச்சிறிய வடிவினர் என் கண்ணுள் இருப்பார் இமைத்தல் கூட வருந்தமாட்டார் .காதல் வசப்பட்ட இரு உள்ளங்கள் பார்த்தபார்வைகளால் கண்ணுக்குள்ளேயே வாழ்வார்கள் கண்இமையை இமைத்தாலும் அந்த பார்வையை விட்டு விலகவும் மாட்டார்கள் வருந்தவும் மாட்டார்கள் அவர்கள் என்றும் பிரியமானவர்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.
Comments