117/ 1162: படர் மெலிந்திரங்கல்
சுரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும்.
பொருள்:
எனக்கு உண்டான இக்காதல் நோயை நெஞ்சிற்குள் அடக்கி மறைக்கவும் என்னால் முடியவி்ல்லை; அதே நேரத்தில், இந்நோயைத் தந்த காதலரிடம் சென்று வெட்கத்தை விட்டு வாய் திறந்து சொல்லவும் நாணம் தடுக்கின்றது.
விரிவாக்கம்:
அடக்க முடியாத ஆசையை உடலிலும் உள்ளத்திலும் மறைக்கவும் தடுக்கவும் தலைவியால் முடியவில்லை.
அதே நேரத்தில், அந்த ஆசையைத் தூண்டிவிட்ட காதலனிடம் நேராகச் சென்று தன் வெட்கத்தை விட்டுச் சொல்லவும் அவளது பெண்மை நாணப்பட்டுத் தடுக்கின்றது.
மறைக்கவும் முடியாமல், வெளிப்படையாகக் கூறவும் முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாக அவள் தவிக்கிறாள்.
காதல் நோயைக் கட்டுப்படுத்தவும் முடியாமல், காரணமானவரிடம் உரைக்கவும் முடியாமல் தவிக்கும் அவல நிலையை இக்குறள் நயம்பட எடுத்துரைக்கின்றது.
English Translation:
Thirukkural:
Suraththalum Aatraenin Noaiyainoaich Seydhaarkku
Uraiththalum Naanuth Tharum.
Meaning:
I am unable to suppress or hide this affliction of love, yet expressing it directly to the one who caused it brings me deep bashfulness.
Explanation:
The maiden is torn between her unbearable longing and her innate modesty.
She finds it impossible to contain the overwhelming passion surging within her heart and body.
At the same time, her sense of shyness prevents her from going to her lover and openly confessing her feelings.
Thus, Thirukkural captures her painful dilemma of being unable to conceal her desire nor speak it aloud to the one who sparked it.
— Daily a Kural, Meaning, and Explanation. Balaji Balasubramaniam.
God to man is Gita; Man to God is Thiruvasagam; Man to man is Thirukkural.

Comments