128/1271:அவர்வயின் விதும்பல்

128/1271:திருக்குறள்:

கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்

உரைக்க லுறுவதொன்று உண்டு.

பொருள்:

நீ உன் மனதின் விருப்பத்தை நாணத்தால் மறைக்க முயன்றாலும், உன்னையும் மீறி உன் மையிட்ட அழகிய கண்கள் எனக்கு உணர்த்த விரும்பும் செய்தியொன்று நிச்சயமாக இருக்கிறது.

விரிவாக்கம்:

தலைவி தன் மனதிலுள்ள காதலையும் விருப்பத்தையும் நாணத்தின் காரணமாக வெளிப்படுத்தாமல் மறைக்க எண்ணுகிறாள். ஆனால், அவளது மையெழுதிய அழகிய விழிகளோ அவளது கட்டுப்பாட்டையும் மீறி, மனதிலிருக்கும் அந்தரங்க ஆசையைத் தலைவனுக்குத் துள்ளியமாகப் படம்பிடித்துக் காட்டிவிடுகின்றன. "நீ வாய்திறந்து சொல்லாமல் எவ்வளவுதான் மறைத்தாலும், உன் கண்கள் என்னை நோக்கிக் கூறும் அன்பின் செய்தியை உன்னால் தடுத்து நிறுத்த முடியாது" என்று தலைவன் அவளது விழிமொழியை நயம்பட உணர்த்துவதாக இக்குறள் அமைகின்றது.

English Translation:

Thirukkural:

Karappinung Kaiyikan Thollaanin Unkan

Uraikka Luruvathondru Undu.

Meaning:

Even if you try to conceal it, defying your restraint, your kohl-lined eyes insist on telling me a secret.

Explanation:

The maiden attempts to hide her deep romantic yearning out of natural bashfulness and female modesty. However, her expressive, kohl-adorned eyes betray her silent effort. The lover gently points out that no matter how carefully she guards her feelings, her eyes speak a clear, intimate language of their own—revealing the love that her heart holds, completely beyond her control.

— Daily a Kural, Meaning, and Explanation. Balaji Balasubramaniam.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்