132/1312:புலவி நுணுக்கம்







132/1312:திருக்குறள்:

ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை

நீடுவாழ் கென்பாக்கு அறிந்து.

பொருள்:

நாங்கள் இருவரும் ஊடல் கொண்டு பேசாமல் இருந்தபோது, "நீடு வாழ்க" என்று கூறித் தன் ஊடலை மறந்து வாழ்த்துவாள் என்பதை அறிந்து கொண்டு, தலைவன் வேண்டுமென்றே தும்மினான்.

விரிவாக்கம்:

தலைவியின் பிணக்கைத் தீர்க்கப் பல வழிகளில் முயன்றும் முடியாத நிலையில், தலைவன் ஒரு நயமான உத்தியைக் கையாள்கிறான். கோபத்தில் பேசாமல் இருக்கும் தலைவி, தான் தும்மினால் பண்பாட்டின்படி தன்மீதுள்ள அன்பினால் "நீடூழி வாழ்க" என்று வாழ்த்தாமல் இருக்க மாட்டாள்; அதன் மூலம் அவளது ஊடல் தணியும் என்பதை நன்கு உணர்ந்து தலைவன் வேண்டுமென்றே தும்முகிறான் என்பதை இக்குறள் சுவைகபட எடுத்துரைக்கின்றது.

English Translation:

Thirukkural:

Oodi Irunthemaath Thumminaar Yaamthammai

Needuvaazh Kenbaarkku Arinthu.

Meaning:

While we were silently sulking, he deliberately sneezed, knowing well that my concern would force me to wish him a long life.

Explanation:

To break the silent tension of a romantic deadlock, the lover uses a clever trick. Knowing that tradition and her deep affection will compel his beloved to offer a blessing if he sneezes, he feigns a sneeze. The trick works—her protective love overrides her anger, forcing her to break her silence with a loving prayer for his longevity, thereby easing their quarrel.

Daily a Kural, Meaning, and Explanation. Balaji Balasubramaniam.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்