132/1320:புலவி நுணுக்கம்
132/1320:
திருக்குறள்:
நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று.
பொருள்:
நான் அவள் அழகையே எப்போதும் நினைத்துக் கொண்டு அவளையே உற்றுப் பார்த்தாலும், "யாருடைய அழகை மனத்தில் நினைத்துக் கொண்டு என்னை இவ்வளவு உற்றுப் பார்க்கிறீர்கள்?" என்று கூறிச் செல்லக் கோபம் கொள்கிறாள்.
விரிவாக்கம்:
தலைவன் தன் தலைவியின் பேரழகில் மெய்மறந்து, அவளையே நினைத்துக் கொண்டு அன்போடு அவளை நோக்கினாலும், தீவிரக் காதலால் எழுந்த ஐயத்தால் தலைவி ஊடல் கொள்கிறாள். "என்னை இப்படி உற்று நோக்குவதற்குப் பின்னணியில் வேறொரு பெண்ணின் நினைப்புதானே இருக்கிறது?" என்று சொல்லிப் பொய்க் கோபம் கொண்டு பிணங்குவதை இக்குறள் நயம்பட எடுத்துரைக்கின்றது.
தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும். பாலாஜி பாலசுப்பிரமணியம்.
English Translation:
Thirukkural:
Ninaiththirunthu Noakkinum Kaayum Anaiththuneer
Yaarulli Noaknineer Endru.
Meaning:
Even if I gaze at her while thinking only of her, she grows cross and asks, "Whose beauty are you reminiscing while looking at me like this?"
Explanation:
Such is the delightful jealousy of deep love that even total devotion is playfully scrutinized. When the lover gazes upon his beloved with admiration, her sweet insecurity prompts her to feign anger, accusing him of comparing her to someone else in his thoughts.

Comments