133/1327:ஊடலுவகை
133/1327:
திருக்குறள்:
ஊடலின் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலில் காணப் படும்.
பொருள்:
காதலர்களிடையே நிகழும் ஊடலில் தோற்றுப் போனவரே உண்மையில் வெற்றி பெற்றவராவார்; அந்த உண்மை ஊடல் முடிந்து இருவரும் கூடும் புணர்ச்சி இன்பத்தின் போது தெளிவாக விளங்கும்.
விரிவாக்கம்:
காதல் ஊடலில் தன் முரண்டுத்தனத்தை விட்டுவிட்டு அன்பிற்குப் பணிந்து முதன்முதலில் விட்டுக்கொடுத்து தோற்றுப் போகிறவரே உண்மையான வெற்றியாளர் ஆவார். ஏனெனில், அவ்வாறு விட்டுக்கொடுப்பதன் மூலம் ஊடல் தணிந்து, அதைத் தொடர்ந்து நிகழும் கூடலின் போது இருவருக்கும் கிடைக்கும் பேரின்பமே அந்த விட்டுக்கொடுத்தலின் பெருமையையும் வெற்றியையும் உணர்த்திவிடும் என்பதை இக்குறள் அழகாக எடுத்துரைக்கின்றது. தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும். பாலாஜி பாலசுப்பிரமணியம்.
English Translation:
Thirukkural:
Oodalin Thotravar Vendraar Athumannum
Koodalil Kaanap Padum.
Meaning:
In a lovers' spat, the one who yields and loses is the real winner; this truth becomes evident in the joy of their subsequent union.
Explanation:
In romantic disagreements, surrendering one's ego out of affection is not a sign of defeat, but a triumph of love. By yielding first, a partner dissolves the tension and restores harmony, which leads to a deeper, more gratifying reunion. Thus, in the dynamics of love, compromising first earns the ultimate reward.

Comments