Posts

27/270:திருக்குறள்-தவம்

இலர் பலராகிய காரணம் நோற்பார் சிலர் பலர் நோலா தவர்.உலகில் செவ்வமுடையவர் சிலர் செல்வமற்றவர் பலர்  என இருப்பதன் காரணம் தவம் கொள்பவர் சிலரும்  அற்றவர் பலருமாக இருப்பதே ஆகும்.இந்த பூமியில் வாழுகின்ற மனிதர்களில் சில பேர் மெய்ஞானம் பெற்றவர்களாகவும் பலர் மெய்ஞானமற்றவர்களாகவும் வாழ்வதாலேயே தவச்செயலை புரிகின்ற முனிவர்கள் சிலரும் தவச்செயலை புரியாத பலரும் வாழ்வதே ஆகும் எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு . 

27/269:திருக்குறள்-தவம்

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு.தவம் செய்தால் வரும் வலிமையில் மரணத்தையும் தவிர்த்தல் எளிதாகும்.தவத்தில் வலிமை பெற்ற துறவிகளுக்கு தங்களுக்கு வரும் இறப்பைக்கூட எதிர்த்து தவம்புரியும் வலிமையுண்டு அந்த அற்புத சக்தியால் துறவிகள் இறந்தலையும் வெல்லுதல் சுலபமாகும் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு . 

27/268:திருக்குறள்-தவம்

தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய மன்னுயி ரெல்லாம் தொழும்.தன் உயிரைத்தனக்கு உரிமையாகப் பெற்றவனை அவ்வாறு பெறாதமற்ற உயிர்கள் வணக்கும்.தற்பெருமையில்லாத தவம்பெற்ற துறவிகளை உலகத்து உயிரினங்கள் அனைத்தும் சிரம்தாழ்த்தி வாழ்த்தி வணக்கி போற்றாத போற்றியெல்லாம் போற்றும் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

27/267:திருக்குறள்-தவம்

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. காய்ச்ச காய்ச்ச பொன் ஒளி மிகுந்து காணப்படும்  அது போல் துறவிகளுக்கு துன்பம் வருந்த வருந்த மெய்யறிவு பெருகும்.சுத்தமான தங்கத்தை உருக்க உருக்க மின்னுவது போல துறவிகளுக்கும் முனிவர்க்கும் துன்பங்கள் பெருக பெருக மெய்ஞானம் பெருகும் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

27/266:திருக்குறள்-தவம்

தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார் மற்றல்லார் அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.தவம் செய்பவரே தமக்கு உறுதியாக்கிய நற்செயலை செய்ய இயலும் தவம் செய்யாதவர் ஆசையின்பால் தீமை செய்வார்.தவம் செய்யும் முனிவர்கள் தங்களின் தேவைகளையும் கடமைகளையும் ஏழ்மையாக நிறைவேற்றிக்கொண்டு இந்த பூமியில் வாழுகின்றவர்கள் தவத்தினை மேற்ககொள்ளாதவர்கள் விருப்பியவற்றை அடைவதற்காக ஆசைகளுக்கு அடிமைகளாகி  அலைந்து திரிந்து  தங்களின் உடலுக்கும் உயிருக்கும் தீங்கை தேடித்தேடி வாழ்வில் மரணத்தை நெருங்கி கொண்டிருக்கும் மனிதர்களவார்கள் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

27/265:திருக்குறள்-தவம்

வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவர் ஈண்டு முயலப்படும்.தவத்தினால் வேண்டியவற்றை வேண்டியபடி அடையமுடியும் எனவே தவக்ககோலத்தை இப்பிறவியிலேயே மேற்க்கொள்ளவேண்டும்.மனிதர்கள் தாங்கள் விரும்பிய பலன்களை நினைத்தபடியே அடையவேண்டுமென்றால் செய்ய வேண்டிய தவம் குடும்பவாழ்வில் சிறப்புற வாழ்தல் அதுவே தவம்புரிந்ததர்க்கு நிகராகும் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு . 

27/264:திருக்குறள்-தவம்

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் எண்ணின் தவத்தான் வரும்.அறமற்றவரை அழித்தாலும் அறமறிந்தோரை உயர்த்த நினைத்தாலும் தவவலிமை பெற்ற துறவிகளுக்கு முடியும்.நல்ல வழியில் வாழ்கையை நடத்தாதவரை அழித்து விடுவதும் அறநெறிகளுடன் வாழும் மனிதர்களை வாழ்வில் உயர்ந்த நிலையில் வாழவைப்பதும் தவத்தில் முற்றிலும் துறந்து தவவலிமைகொண்ட அந்த முனிவர்களால்தான் அற்புதத்தை நிகழ்த்த இயலும் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.