Posts

48/475:திருக்குறள்-வலியறித்தல்

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்சால மிகுத்துப் பெயின்.மயிலிறகு ஆனாலும் அளவிற்கு அதிகமாக ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்து விடும். பாரங்கள் அற்ற பொருட்கள் ஆனாலும் அவற்றை அளவுக்கு அதிகமாக வண்டிகளில் ஏற்றக்கூடாது அப்படி அதிகாமாக ஏற்றி வண்டியை செலுத்த முற்படும்போது வண்டியின் அச்சாணிகள் உடைந்து விடலாமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும். பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு. 

48/474:திருக்குறள்-வலியறித்தல்

அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை வியத்தான் விரைந்து கெடும்.எதிரியின் வலியறியாதவனும் சமாதானமாக போகத்தெரியாதவனும்,தற்புகழ்ச்சி உடையவனும் உடனே கெடுவான்.எதிர்பவர்களின் வலிமையையும் வலியையும் அறிந்துகொண்டு சமாதானமாக போகத்தெரியாதவல்களும் தம்மால் அனைத்தும் முடியுமென்று தற்ப்பெருமை கொள்பவர்களும் உடனே அல்லது காலப்போக்கில் தானாக கெட்டளிந்து போவார்கள் என எடுத்துரைக்கிறது திருக்குறள். தினம் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உன் தாய்மொழி மதிக்கப்படவில்லை என்றால் உன் குரல்வளை  நெரிக்கப்படுகின்றது என்று பொருள். 

48/473:திருக்குறள்-வலியறித்தல்

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர். தன் பலம் அறியாது ஆர்வத்தால் செய்து இடையிலேயே அச்செயலில் தோல்வியுற்றவர் பலர். தங்களின் பலத்தை அறிந்து கொள்ளாது கொண்ட ஆர்வத்தால் செய்யத்தொடங்கிய செயல்களில் தோல்வி கண்டவர்கள் இந்த உலகில் பலர் என எடுத்துரைக்கிறது  திருக்குறள். தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும். பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உன் தாய்மொழி மதிக்கப்படவில்லை என்றால் உன் குரல்வளை  நெரிக்கப்படுகின்றது என்று பொருள்.

48/472:திருக்குறள்-வலியறிதல்

48/471:திருக்குறள்-வலியறிதல்

Image

47/470:திருக்குறள் - தெரிந்து செயல்வகை

Image

47/469:திருக்குறள்-தெரிந்து செயல்வகை

Image
நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந்தாற்றாக் கடை.அவரவர் குணங்களை ஆராய்ந்து அவர்க்கேற்றார் போல் செய்யாவிட்டால் நன்மை செய்தாலும் குற்றம் வரும்.மனிதர்களின் குணங்களை அறிந்து அவரவர் குணங்களுக்கு ஏற்றமாதிரி வாழ்வினில் நடந்து கொள்ளாவிட்டால் மனிதர்கள் எவ்வளவு நன்மையை செய்தாலும் அதில் குற்றமும் குறையும் வந்து சேருமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும். உன் தாய்மொழி மதிக்கப்படவில்லை என்றால் உன் குரல்வளை நெரிக்கப்படுகின்றது என்று பொருள்.