Posts

110/1099:திருக்குறள்-குறிப்பறிதல்

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காநலார் கண்ணே யுள. வெளிலே அயலார் போல ஒருவரை ஒருவர் பார்த்தல் காதல் உடையவரிடத்தில் உள்ள இயல்பாகும்.ஏற்கனவே தெரிந்த ஆணும் பெண்ணும் பலர் நடமாடும் இடங்களில் தெரியாதவர்கள் போல நடந்து கொண்டு கண்டும் காணதமாதரி பாவனைகளை செய்துகொண்டும் கண்களால்  பார்த்து ரசிப்பதும் பேசி மகிழ்வதும் கதலர்களிடையே  வழக்கமாக நடக்கும்இயல்புகளாகுமென  எடுத்துரைக்கின்றது  திருக்குறள்  தினமும்   ஒரு   குறளும்   பொருளும்   விரிவாக்கமும்   பாலாஜி  பாலசுப்பிரமணியம் . உடல்   மண்ணுக்கு   உயிர்   தமிழுக்கு   திருக்குறள்   என்றும்   இந்த   உலகிற்கு .

110/1098:திருக்குறள்-குறிப்பறிதல்

அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப் பசையினள் பைய நகும். நான் தலைவியைப் பார்க்க அவள் அன்பொடு சிரித்தாள் மெல்லிய அச்சிரிப்பில் ஒரு குறிப்பு உண்டு. கணவன் மனைவியை  பார்த்தால் அவள் அன்போடு சிரித்தால் மெல்லிய அந்த புன்னகையில் ஒரு அர்த்தம் இருக்குமென  எடுத்துரைக்கின்றது   திருக்குறள் . தினமும்   ஒரு   குறளும்   பொருளும்   விரிவாக்கமும்   பாலாஜி  பாலசுப்பிரமணியம் . உடல்   மண்ணுக்கு   உயிர்   தமிழுக்கு   திருக்குறள்   என்றும்   இந்த   உலகிற்கு .

110/1097:திருக்குறள்-குறிப்பறிதல்

செறாஅச்  சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும் உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.உள்ளே சினமின்றி கூறும்  இழி சொல்லும் பகைவர் போன்ற பார்வையும் இருந்தாலும் உள்ளே நட்புடையவரின் குறிகளாகும்.கோபம் கொள்ளாத கடும் சொற்களும் எதிரியை பார்ப்பது போன்ற பார்வையும் வெளியாட்களை பார்ப்பது போல நடந்து கொண்டு  உள்ளத்தில் அன்பாக வாழும் மனிதர்களை அடையாளம் கானலாமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

110/1096:திருக்குறள்- குறிப்பறிதல்

உறாஅ  தவர்போல் சொலினும் செறாஅர்சொல் ஒல்லை உணரப் படும்.அயலார் போல் இவள் தோழி என்னிடம் கடுஞ்சொல் கூறினாலும் அவள் சொல் கோபமில்லாதவளின் சொல் என அறியப்படும்.அன்பையோ காதலையோ வெளிக்காட்டாது வெளியிடங்களில் பிறத்தியார் போல நடத்துகொண்டு கடைமையான வார்த்தைகளை உச்சரித்தாலும்  அவளின் உள்ளத்தில் கோபமில்லாமல்  அன்பு பாசம் கொண்டிருப்பது வாழ்வியல் நடைமுறையில் தெரியவருமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

110/1095:திருக்குறள்-குறிப்பறிதல்

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும்.இவள் என்னை நேரே பார்க்கவில்லையேயன்றி ஒரு கண் சுருக்கி பார்த்து மகிழ்வாள்.பெண்கள் நேராக ஆண்களை பார்க்கமாட்டார்களே தவிர ஆனால் கண்களால் உண்டு மனதால் நினைத்து மகிழ்வார்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜிபாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

110/1094:திருக்குறள்-குறிப்பறிதல்

யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் தான் நோக்கி  மெல்ல நகும்.நான் பார்க்கும்போது அவள் நிலம் நோக்கி  நான் பார்க்காதபோது என்னை  பார்த்து புன்சிரிப்பு செய்வாள்.ஆண்கள் நோக்கும்போது நோக்காத பெண்கள் தலையைகுனித்து நிலம்நோக்கி நானத்தின் பொன்முறுவல் காட்டி ஆண்கள் காணதாபோது அவர்களை கண்டு புன்னகை தரும் தமிழ்ப்பெண்களின் தன்மை தமிழ் கலை கலாச்சாரத்தின் வாழ்வியல் உண்மையென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜி பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

110/1093:திருக்குறள்-குறிப்பறிதல்

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவன் யாப்பினுள் அட்டிய நீர்.இவள் என்னை கண்டு தலைகுனிந்தாள்  அச்செயல் எங்கள் அன்பாகிய பயிரை வளர்க்க பாய்ச்சிய நீராகும்.பெண்கள் ஆண்களை நோக்கி தலை குனித்தால் அச்செயல் ஆண்கள்மீது அன்பெனும் பயிரை வளர்த்து நட்புக்காக  திறந்து விட்ட  நீரைப்போல ஆகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜி பாலசுப்பிரமணியம் . உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.