Posts

3/24:திருக்குறள்-நீத்தார் பெருமை

3/24: திருக்குறள்: உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து. பொருள்: அறிவு என்னும் அங்குசத்தால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி ஆள்பவன், பெறற்கரிய மேலான வீட்டுலகப் பேற்றிற்குச் சிறந்த விதையாவான். விரிவாக்கம்: மனிதர்கள் தங்கள் வாழ்வில் மெய்யறிவு என்னும் கருவியைக் கொண்டு, ஐம்புலன்களின் வழியே செல்லும் மனக் கட்டுப்பாடற்ற எண்ணங்களை அடக்கி நல்வழியில் செலுத்த வேண்டும். அவ்வாறு தன் அறிவால் வாழ்க்கையை நெறிப்படுத்தி வாழ்பவர்கள், சமுதாயத்திலும் உலகிலும் போற்றத்தக்க மேன்மையான மனிதர்களாகச் சிறப்புப் பெறுவார்கள் என்பதை இக்குறள் எடுத்துரைக்கின்றது. விரிவாக்கம் பாலாஜி பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும் . English Translation: Thirukkural: Uranennum Thottiyaan Orainthum Kaappaan Varanennum Vaippirkor Vithu. Meaning: He who controls the five senses using the goad of wisdom is a worthy seed for the highest realm of liberation. Explanation: Human life requires strong self-control to guide the mind in the right direction. One who uses intellect...

3/23:திருக்குறள்-நீத்தார் பெருமை

3/23: திருக்குறள்: இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு. பொருள்: இப்பிறப்பு, மறுபிறப்பு என்னும் இரண்டின் தன்மைகளையும் ஆராய்ந்து அறிந்து, இவ்வுலகில் அறநெறியைப் பூண்டு வாழும் துறவிகளின் பெருமையே உலகத்தில் உயர்ந்ததாக விளங்கும். விரிவாக்கம்: இந்த உலகில் மனிதர்கள் நல்வினை, தீவினை ஆகியவற்றின் பலன்களைச் சரியாக ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லற வாழ்வின் நன்மை தீமைகளை உணர்ந்து, துறவற நெறியை மேற்கொண்டு வாழ்பவர்களின் வாழ்வியல் சிறப்புகளைப் போன்ற மேன்மையானது இந்த உலகில் வேறு எதுவும் இல்லை என்பதை இக்குறள் எடுத்துரைக்கின்றது  தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். English Translation: Thirukkural: Irumai Vagaitherinthu Eendaram Poondaar Perumai Pirangitru Ulagu. Meaning: The greatness of those who have understood the dual nature of the world (good and evil, or rebirth and liberation) and adopted righteousness shines supreme in this world. Explanation: When individuals discern the true nature of worldly pleasures and spiritual li...

3/22:திருக்குறள்-நீத்தார் பெருமை

Image
திருக்குறள் (3/22) துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண்டற்று. பொருள்: துறவிகளின் பெருமையை இவ்வளவு என்று அளவிட்டுச் சொல்வது, இந்த உலகத்தில் பிறந்து இறந்தவர்களின் எண்ணிக்கையை எண்ணி அளவிட முற்படுவது போன்றதாகும். விரிவாக்கம்: இந்த உலகத்தில் மனிதர்கள், உண்மையான துறவிகள் காட்டிய நல்வழியில் நடப்பதே வாழ்வியல் நெறிக்கு உகந்ததாகும். பிறந்து இறந்தவர்களை எப்படி எண்ணி முடிக்க முடியாதோ, அதேபோல்தான் துறவிகளின் பெருமையும் எண்ணிலடங்காதது. உண்மையான துறவிகள் மக்களிடம் எதையும் எதிர்பார்ப்பதில்லை; அப்படி எதிர்பார்ப்பவர்கள் போலித் துறவிகளே என்பதை இக்குறள் உணர்த்துகிறது.   Thirukkural: Thurandhaar Perumai Thunaikkoorin Vaiyathu Irandhaarai Ennikkondratru. Meaning: Attempting to measure the greatness of those who have renounced worldly desires is as impossible as counting all the dead souls of this world. Explanation: Following the path shown by true ascetics is the ideal way of life. Just as it is impossible to count every person who has ever lived and died in this world, the greatn...

3/21:திருக்குறள் நீத்தார் பெருமை

Image
திருக்குறள் (3/21) ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு. பொருள்: நல்லொழுக்க நெறியில் நின்று முற்றும் துறந்த முனிவரது பெருமையை, சான்றோர் நூல்கள் சிறந்த பெருமையாக எடுத்துக்கூறும். விரிவாக்கம்: மனிதர்கள் தம் வாழ்வினில் நல்வழியில் நின்று ஒழுக்க நெறியைப் பின்பற்றி வாழ்ந்தால், முற்றும் துறந்த முனிவர்களின் வாழ்வியல் சிறப்புகளை நூல்கள் போற்றித் துதிப்பது போல, இவர்களின் வாழ்வையும் இந்த உலகம் சிறந்த பெருமையுடன் போற்றும் என்பதை இக்குறள் எடுத்துரைக்கின்றது. Thirukkural: Olukkathu Neethaar Perumai Viluppathu Vendum Panuval Thunivu. Meaning: Scriptures proudly declare that the highest greatness belongs to those who observe good conduct and renounce all worldly desires. Explanation: When individuals lead a disciplined life guided by strong moral principles, scriptures and history glorify their life values as much as they honor the greatness of ascetic saints who have renounced everything.

2/20:வான்சிறப்பு திருக்குறள்

Image
2/20: திருக்குறள்: நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும் வானின் றமையா தொழுக்கு. பொருள்: நீர் இல்லாமல் உலக வாழ்க்கை அமையாது என்றால், எப்பேர்ப்பட்டவர்க்கும் மழை இல்லையென்றால் ஒழுக்கமான வாழ்வு நிலைபெறாமல் போகும். விரிவாக்கம்: நீர் இல்லாமல் மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் என எந்த உயிரினமும் இந்த உலகில் வாழ முடியாது. அந்த நீரைத் தந்து உலகைக் காக்கும் வான்மழை பொய்த்துப்போனால், வறட்சியும் வறுமையும் கூடி மக்களின் நன்னடத்தையும் ஒழுக்கமும் நிலைபெறாமல் அழிந்துபோகும். எனவே, உலக உயிர்களின் வாழ்விற்கும், சமூகத்தின் நன்னெறிக்கும் அடிப்படையாக விளங்குவது வான்மழையே என்பதை இக்குறள் எடுத்துரைக்கின்றது. தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும். பாலாஜி பாலசுப்பிரமணியம். English Translation: Thirukkural: Neerin Ramaiyaath Ulagenin Yaaryaarkkum Vaanin Ramaiyaath Ozhukku. Meaning: If it be true that the world cannot exist without water, it is equally true that moral conduct cannot endure without rain. Explanation: Water is fundamental to the physical survival of all living beings. When rain fails and water ...

2/19:திருக்குறள்- வான்சிறப்பு

Image
2/19: திருக்குறள்: தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்கா தெனின். பொருள்: மழை பெய்யாமல் பொய்த்துப் போகுமானால், அகன்ற இந்த உலகத்தில் பிறர்க்குக் கொடுக்கும் தானமும், தம் பொருட்டு மேற்கொள்ளும் தவமும் நிலைபெறாமல் போகும். விரிவாக்கம்: வான்மழை பொழிந்து உலகம் செழிப்பாக இருந்தால் மட்டுமே மனிதர்களால் அறச்செயல்களாகிய தானங்களையும், ஆன்மிக நெறியாகிய தவத்தையும் மேற்கொள்ள முடியும். மழை பொய்ப்பதால் ஏற்படும் வறட்சியும் வறுமையும் மக்களின் நற்சிந்தனைகளையும் நல்வழிகளையும் முடக்கிவிடும். எனவே, உலகில் தானமும் தவமும் தொடர்ந்து நிலைத்திருக்க வான்மழையே அடிப்படை என்பதை இக்குறள் எடுத்துரைக்கின்றது. தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும். பாலாஜி பாலசுப்பிரமணியம். English Translation: Thirukkural: Thaanam Thavamirandum Thangaa Viyanulagam Vaanam Vazhangaa Thenin. Meaning: If the heavens do not grant rain, neither charity nor penance will endure within this vast world. Explanation: Generosity and spiritual practice thrive only when society is peaceful and prosperous. When severe drought strikes due t...

2/28:திருக்குறள்-வான்சிறப்பு

சிறப்பொடு பூசனை செல்லாது  வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. வானம் பொய்த்து மழை பெய்யவில்லையானால்,தேவர்களுக்கும்,பூசையும் திருவிழாக்களும் நடவாது.வான் மழை பொய்க்குமாயின் மழை பொழியாது விடுமாயின் விண்ணுலகில் வாழுகின்ற தேவர்களுக்கும் யாகங்களும் மண்ணுலகின் ஆலயங்களுக்கும் தெய்வங்களுக்கும் திருவிழாக்களும் பூசைகளும் மக்களால் நடத்தமுடியாமல் போய்விடுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்