Posts

67/670:திருக்குறள்-வினைத்திட்பம்

Image
எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம் வேண்டாரை வேண்டாது உலகு.எடுத்த செயலில் உறுதியில்லாதவரை மற்ற எந்த உறுதியிருந்தாலும் உலகம் மதியாது.எவ்வளவு திறமைசாலியாக இருப்பினும் எடுகின்ற செயல்களில் உறுதியற்றவர்களாக மனிதர்கள் வாழ்ந்தால் அவர்களை இந்த உலகம் இகழ்தே ஆகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

67/669:திருக்குறள்-வினைத்திட்பம்

Image
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை.துன்பம் மேலும் மேலும் வந்தாலும் இன்பம் தரும் செயலை துணிந்து செய்தல் வேண்டும்.துன்பங்கள் எவ்வளவு வந்தாலும் இன்பங்களை தரக்கூடிய செயல்களை மனத்துணிவுடன் நிறைவேற்ற வேண்டும் துன்பங்களை கண்டு  பயந்து தவிர்த்து விடக்கூடாதென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

67/668:திருக்குறள்-வினைத்திட்பம

Image
கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது தூக்கங் கடிந்து செயல்.மனம் கலங்காது செய்ய துணிந்த செயலை காலம் தாழ்த்தாது மனம் தளராது செய்தல் வேண்டும். இதயத்தால் வருத்தமடையாமல்  எந்த செயல்களையும் செய்யத்துணிதால் காலத்தை  தாமதப்படுத்தாது  இதயத்தை தளர்த்திக்கொள்ளாது செயல்களை செயல்படுத்தல் வேண்டுமென  எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

67/667:திருக்குறள்-வினைத்திட்பம்

Image
உருவுகண்டு எள்ளளாமை வேண்டும் உருள்பெருந்ததேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து.பெரிய தேரின் சிறிய கடையாணி போன்றவர்களும் உள்ளனர் ஆதலின் மனிதரின் தோற்றம் கண்டு இகழ்தல் வேண்டாம். பெரிதாக இருக்கும் தேரே ஒடக்காரணமாக அமைந்திருப்பது சிறிய அச்சாணியே அதே போலதான் இந்த உலகில் பல விதமான மனிதர்களின் உருவங்களும் அமைந்திருக்கும் அதனால் அவர்களின் தோற்றத்தை வைத்து அவமானப்படுத்தலாகாதென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும்  பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ் 

67/666:திருக்குறள்-வினைத்திட்பம்

Image
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியராகப் பெறின்.நினைத்த பொருளை நினைத்தபடி அடையமுடியும் எண்ணயவர் செயல்மிக்கவராக இருப்பின்.எண்ணும் எண்ணங்களை நிட்சயமாக நிறைவேற்றக் கூடியவர்களால் இருந்தால் எண்ணிய எதையும் அடையமுடியுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும்  பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ் 

67/665:திருக்குறள்-வினைத்திட்பம்

Image
வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன் கண் ஊறெய்தி உள்ளப் படும்.செய்யும் செயலால் பெருமை பெற்றவர் செயல் திறத்தை மன்னன் கேள்வியுற்று நன்கு மதிப்பான்.சிறந்த செயல்களை புரிந்து பெருமைகளை தாங்களாகவே தேடிக்கொள்ளும் திறமை சாலிகளை ஆட்சியாளர்கள் அறிந்துகொண்டு மரியாதை அழித்து மதிப்பார்களென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும்  பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ் .

67/664:திருக்குறள்-வினைத்திட்பம்

Image
சொல்லுதல் யாருக்கு எளிய அறிவாம் சொல்லிய வண்ணம் செயல்.ஒரு செயலை செய்வோம் என சொல்லுதல் எவருக்கும் எளிது சொன்னபடிசெய்தால் அரியதாகும்.இந்த செயலை செய்யமுடியும் எனக்கூறுவது யாருக்கு இலகுவானது ஆனால் அதை செய்வதே மிக கடினமானது சொன்ன சொற்படி செய்துவிட்டால் அருதாகிவிடுமைன எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.