2/11: திருக்குறள் வான்சிறப்பு
2/11: திருக்குறள்: வானின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற்பாற்று. பொருள்: மழை பெய்வதால் உலகம் நிலைபெற்று வாழ்ந்து வருகிறது; எனவே, பெய்யும் மழையே உலக உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தகும். விரிவாக்கம்: இந்த உலகிற்கு வான்மழை இடைவிடாது பொழிவதால்தான் உலக உயிரினங்கள் அனைத்தும் தொடர்ந்து வாழ முடிகிறது. மழை பொழியும்போது உழவர்கள் மகிழ்ச்சியோடு மண்ணைப் பண்படுத்திப் பயிர்களை விதைக்கின்றனர்; அப்பயிர்கள் முளைத்து உலகிற்கு உணவளிக்கின்றன. எனவே, உலகத்தை வாழ வைக்கும் வான்மழையை உயிர்களைக் காக்கும் 'அமிழ்தம்' என்றே கருத வேண்டும் என்பதை இக்குறள் எடுத்துரைக்கின்றது. — தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும். பாலாஜி பாலசுப்பிரமணியம். தமிழனை தமிழனே ஆளவேண்டும் அடிமைபடுத்தாமல் அமைதியாக ஆளவேண்டும் தமிழன் சுதந்திரமாக வாழவேண்டும் சுயநிர்ணயத்துடன் வாழவேண்டும் English Translation: Thirukkural: Vaanindru Ulagam Vazhangi Varuthalaal Thaanamizhtam Endrunarar Paatru. Meaning: Because rain sustains the world, it is to be known as the divine ambrosia (nectar of life) that keeps a...